ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.

 

நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்நிலையில் ஆரம்பத்தில் தடுமாறிய அந்த அணி, வெறும் 36 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

 

இந்நிலையில், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் அணியை மீட்டெடுத்தனர்.

 

பொறுப்புடன் விளையாடிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி சதம் முதலில் 102ஓட்டங்கள் அடித்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் அரைசதத்தில் 50 ஓட்டங்களை கடந்தநிலையில் தோல்வி அடைந்தார்.

 

இந்நிலையில்,இறுதியில், 44.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 

அத்துடன்,219 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர்கள் பலமான அடித்தளம் அமைத்தனர். அணித்தலைவர் ரோஹித் சர்மா 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

மறுபுறம் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 110 ஓட்டங்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 28.4 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *