தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37வது நினைவு தினம் இன்று (13) கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமிர்தலிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தின் அரசியல் பணிகள், தமிழ் மக்களின் உரிமைக்கான அவரது பங்களிப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக தனது கருத்துக்களை வெளியிட்டார்.

