கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) அதிகாலை சுமார் 1.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அலுவலகத்திலிருந்து புகை வெளியேறுவதை அவதானித்த காவலாளர், உடனடியாக சங்க பணியாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பணியாளர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் வளிச்சீராக்கி, நிழற்படப் பிரதி இயந்திரம் உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

