மேஷம் : தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும். செலவுகளைத் திட்டமிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்: தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களால் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.
மிதுனம்: பணிச்சுமை குறைந்து நிம்மதி ஏற்படும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கடகம்: சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்: பொருட்கள் திருட்டுப் போகும் வாய்ப்புள்ளதால் அவதானம் தேவை. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் கிடைத்தாலும் சில சவால்களும் ஏற்படலாம்.
கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
துலாம்: காணி, வீடு தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். செலவுகளை கவனமாகக் கையாள்வது அவசியம்.
விருச்சிகம்: பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். சொத்துப் பாகப்பிரிவினை தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
தனுசு: குடும்பக் குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்து மற்றும் வாகன வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மகரம்: பணிகள் சாதகமாக முடிவடையும். கொடுத்த கடன் மீண்டும் கைக்குக் கிடைக்கும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கும்பம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். பேசும்போது நிதானம் தேவை. உத்தியோக ரீதியாகப் பதவி மூலம் நன்மைகள் கிடைக்கும்.
மீனம்: பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சொத்துப் பாகப்பிரிவினை சுமுகமாக முடிவடையும். குடும்பத் தொழிலில் லாபம் கிடைக்கும். வழக்குப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

