மேஷம்: குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் குடும்ப ரகசியங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
ரிஷபம்: வரி மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வங்கிக் காசோலைகளில் முன்கூட்டியே கையெழுத்திட வேண்டாம்.
மிதுனம்: கல்வி மற்றும் தொழில் விடயங்களில் உதவிகள் கிடைக்கும். இரவு நேரப் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்: உடல்நலத்தில் கவனம் தேவை. சில சவால்களைத் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.
சிம்மம்: புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வேலைவாய்ப்பு மற்றும் சொத்து தொடர்பான விடயங்கள் சாதகமாக அமையும்.
கன்னி: தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். பணவரவு மற்றும் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் உண்டாகும்.
துலாம்: உணவு மற்றும் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கை அவசியம்.
விருச்சிகம்: குடும்பச் செலவுகள் அதிகரிக்கலாம். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.
தனுசு: திருமணத் தடைகள் நீங்கும் வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகளைப் பெற்றோருடன் ஆலோசித்து எடுக்கவும்.
மகரம்: தொழில் விடயங்களில் ரகசியங்களைக் காக்கவும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் நடந்துகொள்ளவும்.
கும்பம்: பணியிடத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மேலதிகாரிகளிடம் கவனமாகப் பேசவும்.
மீனம்: ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய முடிவுகளில் அவசரம் வேண்டாம். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.

