அமெரிக்க செனட் அதிகாரம் ஜனநாயகக் கட்சியின் வசமானது!

அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை ஜனநாயக் கட்சி கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் வசம் இருந்த இந்த செனட் சபையின் பெரும்பான்யை பெறுவதற்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்டன.

இந்நிலையில் சற்றுமுன்னர் வரையில் வௌியாகியுள்ள அமெரிக்க பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செனட் சபையில் ஜனநாயக கட்சி 51 இடங்களை கைப்பற்றியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி இதுவரையில் 39 இடங்களை பெற்றுள்ளது.

லோவாவில் (Iowa) பெற்ற எதிர்பாராத வெற்றியின் மூலம் ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையின் மீதான தமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கென்சாஸ் (Kansas), டெக்சாஸ் (Texas) மற்றும் தெற்கு கரோலினா (South Carolina) போன்ற குடியரசுக் கட்சியின் கோட்டைகளாக விளங்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியினர் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து அதிர்ச்சியளித்துள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் இச்சபையில் மேலும் ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

மிச்சிகன் (Michigan) மற்றும் மினசோட்டா (Minnesota) ஆகிய மாநிலங்களில் தாம் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் இரண்டு ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சியினர் இழந்தாலும் கூட, செனட் சபையில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான அளவு உறுப்பினர்களை அவர்கள் இன்னமும் கொண்டுள்ளார்கள்.

டெக்சாஸில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகக் கட்சியினர் மாநில அளவிலான எந்தவொரு பதவியையும் வென்றிராத நிலையில், ட்ரம்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரான கென் பாக்சனை (Ken Paxton), ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தாலாரிகோ (James Talarico) தோற்கடித்தார்.

தெற்கு கரோலினாவில், இந்த ஆண்டு காலமான தனது சகோதரர் லின்சே கிரஹாமின் (Lindsey Graham) இடத்திற்கு ட்ரம்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தற்போதைய குடியரசுக் கட்சி உறுப்பினரான டார்லின் கிரஹாமை (Darline Graham), ஜனநாயகக் கட்சியின் அன்னி ஆண்ட்ரூஸ் (Annie Andrews) தோற்கடித்தார்.

மேலும் ஒஹியோவில் (Ohio), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) வகித்த ஆசனத்தை ஜனநாயகக் கட்சியின் ஷெரோட் பிரவுன் (Sherrod Brown) கைப்பற்றினார்.

இது ஜனநாயகக் கட்சியினர் அடைந்த பெரும் முன்னேற்றத்தின் அளவை எடுத்துக்காட்டுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு கரோலினாவில் 18 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்திலும், கென்சாஸில் 16 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்திலும் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார்.

அதேநேரம் பிரதிநிதிகள் சபையில் சற்றுமுன்னர் வரையில் ஜனநாயக் கட்சி 184 இடங்களை கைப்பற்றியுள்ளது.

ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி 110 இடங்களை பெற்றுள்ளது.

பிரதிநிதிகள் சபையின் 435 மொத்த ஆசனங்களில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த 218 ஆசனங்கள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *