ஜென்சன் ஹுவாங் கடந்த வாரம் திடீரென தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து, என்விடியா (Nvidia) நிறுவனம் புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் (CEO) தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் “நிறுவனத்திற்கு வெளியிலிருந்து ஒருவரைத் தலைமைப் பதிவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமையன்று முறையற்ற உறவுகள் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஹுவாங் தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய சீன உளவுத்துறை அதிகாரி ஒருவருடனான தொடர்பும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
சில வெளிநாட்டு ஊடகங்கள் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய ஸ்காட் பெசென்ட், “புதிய தலைவரைத் தேர்வு செய்ய வாரியம் நடத்தும் தேடலின் போது, அவர்கள் நிறுவனத்திற்கு வெளியிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். நிறுவனத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரு பெரிய மாற்றம் தேவைப்படுகிறது” என்று கூறினார்.
மேலும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு இணங்குவது தொடர்பான நிறுவனத்தின் கலாசாரம் குறித்த கேள்விகளுக்கு, என்விடியா வாரியம் மற்றும் அதன் வெளியக சட்ட ஆலோசகர்கள் அடுத்த 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் பெசென்ட் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹுவாங்கிற்குப் பதிலாக மாற்று வழி குறித்து ஆராய்ந்து வரும் என்விடியா வாரியம், பிரிட்டிஷ் சிப் தயாரிப்பு நிறுவனமான ‘ஆர்ம் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெனே ஹார்சை அணுகியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

