வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் பண்டாரகம அசேல என்பவரெ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரிவுக்குட்பட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய ரைகம பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரிவுக்குட்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவிஷ்கா எனப்படும் அல்பா என்பவரின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதப் போக்குவரத்து நடவடிக்கைகளுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டு அவரைக் கைது செய்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது பிளாஸ்டிக் குழாய் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரகம காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *