மிதந்து வந்த இரண்டு இன அழிப்பு நினைவுத் தூபிகளால் பரபரப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று(17) இரவு 9 மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவதினமான இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் இரு மிதக்கும் வகையிலான இன அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்துவாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட மக்கள் இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இனையடுத்து அங்கு வந்த புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்த நிலையில் அந்த மர்மான படகுகள் முகத்துவாரம் நோக்கி வாவியில் நகர்ந்து கொண்ட போது டச்பார் பகுதி வாவிக்கரையில் அமைந்துள்ள மீன்பிடிப்படகு தயாரிக்கும் கட்டிடப் பகுதியில் கரையடைந்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அதனை கரைக்கு இழுத்துக் கொண்டு வந்து மீட்டனர்.

 

சுமார் 4 அடி கொண்ட சதுரமான றெயிபோமில் நடுவில் முள்ளிவாய்கால் அமைந்துள்ள நினைவுத் தூபி போன்ற புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்டு அதற்கு அருகில் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மெழுகுதிரி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.

 

இந்த இன அழிப்பு நினைவு கூறும் முகமாக வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபியை யார் அமைத்தது இதனை எங்கிருந்து வாவியில் விட்டார்கள் என தெரியாது அரசாங்க புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸாரை திக்கு முக்காட வைக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட அந்த மிதக்கும் நிலையில் தயாரிக்கப்பட்ட இன அழிப்புத் தூபியை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *