கிழக்கின் 2 பில்லியன் நிதி: அருச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு 30 பில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாணத்திற்கு 2 பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய கேள்விகளை எழுப்புவதில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கின் அபிவிருத்தி, குடிநீர் பிரச்சினை மற்றும் மக்களின் காணி விவகாரங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *