கஹவத்தை வைத்தியசாலையில் தீ விபத்து!

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (17) அதிகாலை 3.45 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு மணித்தியாலம் வரை பரவிய தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரத்தினபுரி மாநகர தீயணைப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

தீக்கிரையான கட்டிடம் நோயாளர்களுக்கான விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், பின்னர் புதிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வார்ட் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போது தீ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், மின்சார ஒழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *