வட்டவளையில் உணவு ஒவ்வாமை: 35 மாணவர்கள் அனுமதி!

வட்டவளை, டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலை ஒன்றில் இன்று (17) காலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாக 35 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலி காரணமாகவே இந்த மாணவர்கள் குழு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பிரதேச வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் கறி மற்றும் கீரைவகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அப்பாடசாலையின் 3 ஆம் தரம் தொடக்கம் 5 ஆம் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு ஒவ்வாமை காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் மாணவர்களின் நிலைமை பாரதூரமானதாக இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *