பிரதேச மட்டத்திலான கலை இலக்கியத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக கவிதை, சிறுகதை, பாடல் நயத்தல், கதை சொல்லுதல் போன்ற வாய்மொழி மூலமான போட்டிகள் பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, கனிஷ்ட பிரிவு, சிரேஸஷ்ட பிரிவு, அதி சிரேஷ்ட பிரிவு மட்டங்களிலும், திறந்த பிரிவில்
சிறுகதை, மரபு மற்றும் புதுக்கவிதை சிறுவர் கதை ஆக்கம் மற்றும் திரைப்பட விமர்சனம் என பல போட்டி நிகழ்ச்சிகள் பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு இடம்பெற்றிருந்தன.
இந்த போட்டி நிகழ்வுகளில் பிரதேச செயலக பிரிவிலிருந்து மாவட்ட மட்டம் மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களது கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கணக்காளர் வ. நாகேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ. பிரபாகரன், நிருவாக உத்தியோகத்தர் க . கருணாநிதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், உட்பட பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் செ. பேரின்பராசா, கலாசார அதிகார சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜயந்தா அரங்கன் ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

