பாலையடிவட்டை வட்டாரத்தின் வீதிகளை ஒளிரச் செய்து, இரவு நேரப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் வீதி மின்விளக்குகள் சாணக்கியன் எம்பியால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட குறித்த மின்விளக்குகள், இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டன.
குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், காட்டு யானைகளின் நடமாட்டத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்கும் நோக்கிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் அ. தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன், பிரதேச சபை உறுப்பினர் ம. கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

