இன்றைய நாளுக்கான ராசிபலன்!

மேஷம்: பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இடமாற்றம், புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் இருந்த பணிகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: இன்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை மற்றும் இலக்கியத் துறையினருக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைக்கலாம்.

மிதுனம்: தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் தேடி வரலாம்.

கடகம்: நீண்டநாள் நிலுவையில் இருந்த கடமைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்: தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தொடங்கும்போது நிதானமாகச் செயல்படுங்கள்.

கன்னி: பணிச்சுமை படிப்படியாகக் குறையும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் கடன் சுமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

துலாம்: ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவோருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தொழில் நிறுவனங்களின் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம்.

விருச்சிகம்: பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய அறிமுகங்களும் முன்னேற்ற வாய்ப்புகளும் உருவாகும்.

தனுசு: சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான முயற்சிகளை ஆரம்பிக்க ஏற்ற நாளாகும்.

மகரம்: உற்பத்தித் தொழில்கள் சீராக நடைபெறும். வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது அவதானம் தேவை. முயற்சிகளின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்: காணி மற்றும் வீடு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கலாம். செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது அவசியம். பிறருக்கு உதவும்போது கவனம் தேவை.

மீனம்: வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடப் பிரச்சினைகளை நிதானமாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *