மட்டக்களப்பில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வுக் கண்காட்சி!

மட்டக்களப்பு SriLanCan Learn Kindergarten பாடசாலையின் ஏற்பாட்டில், பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் PLASTOPIA விழிப்புணர்வுக் கண்காட்சி நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி Yanaarthani Mahilnamby தலைமையில், கடந்த 15ஆம் திகதி இக்கண்காட்சி நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. Meharaj கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து உருவாக்கிய பல்வேறு ஆக்கப்பூர்வமான படைப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

குறிப்பாக, கழிவுகளைத் தரம் பிரித்தல், பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல், மீள்பாவனை மற்றும் மறுசுழற்சி, வீட்டுக் கழிவுகளை இயற்கைப் பசளையாக மாற்றுதல், வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் செய்முறைப் படைப்புகளாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

சிறுவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *