இன்றைய இராசிபலன் 25. 03. 2025
மேஷம்
கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். உடல் நலம் மேம்படும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை.தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் ஏற்படும்.ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். சகோதரி இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார்.பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர். தங்கள் சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
எதிர்காலத்திற்கென சேமிக்க துவங்குவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.மாணவர்களின் தேவை பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கன்னி
மனதில் மகிழ்ச்சி நிலவும்.வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர்.மூத்த சகோதரரால் நன்மை விளையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். பங்குச் சந்தை மூலம் பணம் கிடைக்கும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
பந்தங்கள் வீடு தேடி வந்து அன்பு பாராட்டுவர். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். நீண்ட நாட்களாக இருஇருந்த ஒற்றைத் தலைவலி நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தேக பலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மீனம்
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பங்கு சந்தையால்
அனுகூலம் உண்டு. மாணவர்கள் விடுமுறையிலும் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

