மேஷம்:
தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இருக்கும். தலை குனிந்த இடத்தில் பெருமையோடு உங்களுடைய புகழை பேசலாம். வெற்றிக்காண கூடிய நாள்.
ரிஷபம்:
வியாபாரத்தில் லாபத்தை இரட்டிப்பாக்க விளம்பரங்களை செய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும்
மிதுனம்:
மன அமைதியான நாளாக இருக்கும். சிக்கலான விஷயங்கள் கூட சுலபமாக நடக்கும். இந்த விஷயத்தை எப்படி செய்வது என்று கொஞ்சம் குழப்பத்தோடு இருந்தவர்களுக்கு எல்லாம் மன தெளிவு கிடைக்கும்.
கடகம்:
சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அதற்கான பெயரும் பாராட்டும் புகழும், உங்களுக்கு கிடைக்கும்.
சிம்மம்:
பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும்.
கன்னி:
வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதப்பட்டு வந்தடையும்.
துலாம்:
அரசாங்க காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
கடின உழைப்பை முதலீடாக போடுங்கள். தேவையற்ற இடங்களில் பிரச்சனை செய்து கொள்ள வேண்டாம் தேவையற்ற பகைகள் உண்டாகும்
தனுசு:
சுறுசுறுப்பு குறைவாக காணப்படும். இதனால் சின்ன பின்னடைவு உண்டாகலாம். கவலைப்படக்கூடாது. குழப்பம் இல்லாமல் தெளிவாக சிந்திக்க வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று நன்மையை இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
மகரம்:
வேலை செய்பவர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுப்பீர்கள். அடுத்தவர்களுக்கு நல்லது நினைக்கக்கூடிய நாளாக இருக்கும். பொதுப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும்.
கும்பம்:
இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மனிதர்களின் நட்பு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்களுக்கு கூட கைநிறைய பணம் லாபமாக கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள்.

