அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம் பிரதேச சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட கூட்டம் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ்.உதுமாலெப்பை மற்றும் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


