கிளிநொச்சி உருத்திர புரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இன்று(15) காலை நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது பாடசாலையின் முதல்வர் சிவதர்சினி கிருசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ம. பற்றிக்நிரஞ்சன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் ஏனைய பாடசாலைகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

