மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *