இன்றைய இராசிபலன்- 01.04.2025

மேஷம்:

உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை அதிகாரிகளால் பாராட்டப்படும்.

ரிஷபம்:

தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

மிதுனம்:

தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கடகம்:

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

சிம்மம்:

பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள்.

கன்னி:

கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது இழுபறி யாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ் நிலையே காணப்படும்.

துலாம்:

எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். வாழ்க்கைத்துணை  உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள்.

விருச்சிகம்:

தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோச னையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும்.

தனுசு:

குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

மகரம்:

தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும்.

கும்பம்:

முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனை விக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மீனம்:

உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகளை தொடங்கு வது நல்லது. வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். அலுவல கத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.  வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *