மட்டக்களப்பு நகரில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமே ஆனால் ஒரு பலமான அரசாங்கத்துடன் இருக்கும் ஒரு மாநகர சபை ஆட்சியை அமைக்க வேண்டும் தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கலாநிதி கனகராஜா பிரேம்குமார்.
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் மூலம் நாம் பல வேலை திட்டங்களை முன்னெடுக்க முடியும்
மக்களின் வரி மூலம் சில வேலை திட்டங்களை முன்னெடுத்தாலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆளும் அரசாங்கத்தின் வகிபாகம் மிக முக்கியமானதாகும்
எனவே மக்கள் ஆளும் அரசாங்கத்துடன் இருக்கும் கட்சியை ஆதரிப்பதே முக்கியமானதாகும் கடந்த ஆட்சியின் போது இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை
எமது ஜனாதிபதி அரசாங்கம் இருக்கும் போது வெற்றிக்கான நிதிகள் கிடைப்பது மிகவும் இலகுவான விடயம் எனவே மக்கள் எமது கட்சிக்கு ஆதரவு தர வேண்டுமென
மட்டு மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் க. பிரேம்குமார் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

