2025 உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்காக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீடு கட்டப்பட்டு வீட்டு திறப்பு விழா நேற்று(05) நடைபெற்றது.
இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் பிரதேச அமைப்பாளர்கள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றனர்.
இந் நிகழ்வு நேற்று காலை 11 மணிக்கு குடும்பத்தினருக்கு உத்தியோகப்பூர்வமாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வியால் மனை பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட மனை மஸ்கெலியா நகரில் உள்ள ஸ்ரீ சண்முக நாதர் ஆலய சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ளது.

