நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை உட்லக் தோட்ட முன்பள்ளியில், நேற்று(06) காலை ஆசிரியை திருமதி புஷ்பராணி தலைமையில், சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது.
“உலகை அன்பால் போசியுங்கள்” எனும் சிறுவர் தினத்துக்கான தொனிப்பொருளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினராக ஹோல்ப்ரூக் – அக்கரப்பத்தனை இணைப்பாளர் கலந்து கொண்டு, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்ததோடு, மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வூட்டும் உரையும் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில், ஆசிரியர் திருமதி புஷ்பராணி நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

