நல்லதண்ணி தேயிலைத் தொழிற்சாலையில் தீ விபத்து

மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் அமைப்பால் நீரில் மூழ்கடிக்கப்பட்ட லக்சபான தோட்ட தேயிலைத் தொழிற்சாலைக்குப் பதிலாக லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் 1968 ம் ஆண்டு காலப் பகுதியில் அதி நவீன முறையில் கட்டப்பட்ட தேயிலைத் தொழிற்சாலை நேற்று(08) நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் தீ பற்றி எரிந்து உள்ளது.
இச் சம்பவத்தால் ஆயிரம் கோடிக்கு மேல் பெறுமதி வாய்ந்த லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் அமைக்கப்பட்ட தேயிலைத்தொழிற்சாலை நாசமடைந்து உள்ளது.
இத் தேயிலைத் தொழிற்சாலை தீயினால் தேயிலை தொழிற்சாலையின் இயந்திரங்கள் மற்றும் தேயிலைத் தூள் பொதியிடப்பட்டு சேமித்து வைக்கும் களஞ்சியசாலை பாரிய அளவில் எரிந்து உள்ளது எனவும் உயிர் சேதங்கள் இல்லை எனவும் தீயை அணைக்க நல்லதண்ணி பொலிஸார் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடிப்படையினர் மவுசாக்கலை நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய், லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா நகரில் உள்ள தீ அணைக்கும் நீர்த்தாரைப் படையினர் அதிகாலை வரை போராடி தீயை அணைக்க முற்பட்டனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத் தீ பரவல் குறித்து பல கோணங்களில் புலன் விசாரணை நடத்த நல்லதண்ணி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *