கலஹாவில் இருந்து ஹந்தான வழியாக கண்டிக்கு செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு

கலஹா நகரில் இருந்து ஹந்தான வழியாக கண்டிக்கு செல்லும் பிரதான வீதியில், கித்துல்முல் பகுதியில் இன்று(14) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.
வீதியில் சரிந்துள்ள மண்களை அகற்றி, நிலைமையை சீர்செய்யும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *