இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் காயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் இன்று(14) காலை 9:00 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொட்டகலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *