கண்டியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஜெகநாதன் அபினேஷ்க்கு தங்கப் பதக்கம்

கண்டியில் கடந்த 12ஆம் திகதி அன்று நடைபெற்ற கராத்தே போட்டியில் புசல்லாவை, ரொத்ஸ்சைல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஜெகநாதன் அபினேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இவரை குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
மேற்படி கராத்தே போட்டியில் சென்செய் டி.எஃப் அலோசியஸ் இன் வேண்டுகோளுக்கமைய ஸ்டோகன் புசிடோ கழகத்தில் இருந்து பயிற்றுவிப்பாளர் சென்செய் தனராஜ் (சுதன்) தலைமையில் 13 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் அபினேஷ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *