மட்டக்களப்பில் அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் உற்சாகமாக காலையிலிருந்து வாக்களித்து வருகின்றனர்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 சபைகளுக்காக இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 447 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 144 வட்டாரங்களில் இருந்து மேலதிக பட்டியலுடன் சேர்ந்து 274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

இம்முறை 6000 அரச உத்தியோகத்தர்கள் இந்த தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அவர்கள் மட்டுமின்றி பொலிஸ் இராணுவ உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *