‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா

நடிகர்கள் பிரஜின் – புகழ் ஆகிய இருவரும் நகைச்சுவை நடிகர்களாக நடிக்கும் ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் யோகேஸ்வரன் மைனர் இயக்கத்தில் உருவாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி ‘எனும் திரைப்படத்தில் பிரஜின், புகழ், ஜனனி, விக்ரம் விஜய், ரவி மரியா, மைம் கோபி, தீபா, அபிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் தேவா இசையமைக்கிறார்.

கொமடி எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் கே புரொடக்ஷன்ஸ் மற்றும் இகாப்மின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் வினோத் பெருமாள் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒரே வீட்டில் இரண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும்? என்பதை முழு நீள நகைச்சுவை படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது” என்றார்.

படக்குழுவினர் பங்கு பற்றிய இப்படத்தின் தொடக்க விழாவில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி , தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி – சி வி குமார் – கே .ரமேஷ் பாண்டியன்- இயக்குநர் சுப்பிரமணிய சிவா – ஸ்ரீநாத் நடிகர்கள் சௌந்தர் ராஜா – கஞ்சா கருப்பு ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *