நாக தேவியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீடு

நாக தேவியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீட்டு விழா பருத்தித்துறை பன்னையம்பதி நாகபூசணி அம்மன் ஆலய தர்மகர்த்தா ஜெயாநத்தம் ஜெயகோபி தலமையில் நேற்று(15) பிற்பகல் 8:00 மணியளவில் பருத்தித்துறை பன்னையம்பதி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு வெளியீட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் ஆசி உரையினை பன்னயம்பதி நாக பூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ பாலத்தீஸ்வர குருக்கள் நிகழ்தினார்.
வாழ்த்துரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கரவெட்டி கோட்ட கல்வி அதிகாரியும் பரம்பரை சுதேச வைத்தியருமான கதிர்காமு யோகநாதன் மற்றும் உடுத்துறை மகா வித்தியாலய ஆசிரியர் தயாளன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இறுவெட்டினை ஜெயகோபி வெளியிட்டு வைக்க நிகழ்வின் பிரதம விருந்தினர் பரம்பரை வைத்தியர் கதிர்காமு யோகநாதன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மக்கள் வங்கி முகமையாளர் அரவிந்தன், 407 கிராம அலுவலர் சதுர்த்திகா, ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், இசைகோயில் வெளியீட்டக தலைவர் பொன். சக்திவேல், கலாபூசணம் கலை பருதி ஜெயானந்தம் ஆச்சாரி, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், உபதவிசாளர், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பன்னையம்பதி அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வெளியீடு செய்யப்பட்ட 3 பாடலுக்குமான வரிகளை சக்திவேல் மற்றும் நிதர்சன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
பாடல்களை அனுஷ்கா, சுலக்சன், சக்திவேல் ஆகியோர் பாடியிருந்தனர். இசையை பிரஷாத் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *