வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரை காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு

வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய குறித்த மாணவி கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தாயாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்பவரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.
இவர் தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0778060470 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது வவுனியா பொலிஸாருக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரூகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *