ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு ஆரம்பம்

இன்று காலை(22) சாவகச்சேரியின் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
இம் மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள விளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் பாட்டு பாடப்பட்டதுடன் ஆரம்பமானதுடன் இவ் மாநாட்டில் கட்சியின் எதிர் கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடபடவுள்ளது.
இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள், கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *