யாழில் தனிமையில் வசித்து வந்த 29 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – குடத்தனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

 

அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கணேசலிங்கம் ஜதுர்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இன்று (02) காலை குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

 

அதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், அழுகிய நிலையில் காணப்பட்ட உடலத்தை மீட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *