கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவனுக்கு கௌரவம்

அகில இலங்கை தேசிய சமூகவிஞ்ஞான போட்டியில்(2025)  முதலாம் இடத்தைப்பெற்ற கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவனுக்கு பாடசாலை சமூகம் கெளரவிப்பு வழங்கியது.

 

கடந்த வருடம் 10ம் மாதம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 06  மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் முதலிடத்தினைப் பெற்றிருந்தார்.

 

இன்று பாடசாலை ஆரம்பித்த நிலையில் குறித்த மாணவன் பாடசாலை சமூகத்தினால் கெளரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *