துணுக்காய் பிரதேசத்தில் விதை நெல் உற்பத்தி பயிற்சி

துணுக்காய் பிரதேசத்தில் காணப்படும் விதை நெல் தட்டுப்பாடு, விவசாயிகளின் வருமான உயர்வு தேவைகள், களை நெல் கட்டுப்பாடு போன்ற பல முக்கிய காரணிகளுக்கான நிரந்தரத் தீர்வை உருவாக்கும் நோக்கில், துணுக்காய் பிரதேச செயலாளர் ரமேஸ் வழிகாட்டலின் கீழ் விதை நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு பயிற்சி நெறி நேற்று(03) காலை 10.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன், தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விதை நெல் உற்பத்தியின் முக்கியத்துவம், தரமான விதைத் தேர்வு முறைகள், சுத்திகரிப்பு செயல்முறைகள், களை நெல் கட்டுப்பாட்டு நடைமுறைகள், விளைச்சல் அதிகரிப்பு முறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச விவசாய போதனாசிரியர்கள் ஜெனோசன், குணதீசன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கினர். மேலும், எதிர்காலத்தில் துணுக்காய் பிரதேசத்தை தன்னிறைவு பெற்ற விதை நெல் உற்பத்தி மையமாக உருவாக்கும் நோக்கமும் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *