யாழில் மாட்டினை இறைச்சியாக்க கொண்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலை கேணி பகுதியில் மாடொன்றினை இறைச்சியாக்கும் நோக்குடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து மாட்டினை மீட்டுள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

