மன்னாரில் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது

மன்னார்  ஜிம்ரோ நகர் பகுதியில் 2  இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்ஞ(10) 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்  உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு  வருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *