நாடுகடத்தப்பட்ட 21 சந்தேகநபர்கள் விமான நிலையத்தில் கைது

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் பாதாள கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 21 பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

அதிகாலை விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், விமான நிலைய வளாகத்திலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

அவர்கள் நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்து, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ‘மஹவத்தே சாமர’, ‘குடு துமிந்த’ உள்ளிட்ட பிரபல பாதாள குழு பிரபலங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதிலும், சீரற்ற வானிலை நிலைமை காரணமாக, மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *