நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் ; “மூச்சின் மூச்சு வீரனின் புகழிடம்” என்ற திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு ஏறாவூர்ப்பற்று தும்பாலஞ்சோலை இராணுவ முகாமில் 232 ஆவது காலாட்படை சிவில் இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் எல்ஜீஆர்பீகே. விமலசேனவின் தலைமையில் இன்று(29) நடைபெற்றது.
சர்வமத அனுஷ்டானத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜேஎஸ். அருள்ராஜ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், வவுணதீவு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்எஸ். ஜறூல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்ப உறவினர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
அதன்பின் இங்கு மூலிகைக்கன்றுகள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

