மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புகைத்தல் தடை செய்யப்பட்ட வலயமாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜினால் நேற்று (01) பிரகடனப்படுத்தப்பட்டது.
உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 31 ஆம் திகதி உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள், புற்றுநோய், இதய நோய்கள், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிரேஸ்ட சாரண மாணவி செல்வி மதிவண்ணன் ஸ்ருதிகாவினால் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

