ஓட்டமாவடியில் உலக சுற்றாடல் தின மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “ஒரு மரம் நடுவோம் – பசுமை நிறைந்த நாளைய தலைமுறையை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், மரங்களை வளர்ப்பதும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரீக் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *