நாட்டின் 14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் தொடர்பாக எச்சரிக்கை

நாட்டின் 14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கார தெரிவித்துள்ளார்.

 

அதிக ஆபத்துள்ள 72 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், டெங்கு ஒழிப்புப் பணிகளுக்குத் இடையூறாக செயல்படுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நாட்டின், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 36 ஆயிரத்து 168 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

 

இந்த வருடத்தில் மாத்திரம், மூன்று சிறுவர்கள் உட்பட இதுவரை 20 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *