கருவேப்பங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி கைது

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு புகையிரதத்தில் 25 கிராம் ஐஸ் போதைப் பொருளை வியாபாரத்துக்காக கடத்தி வந்த கருவப்பங்கேணியில் வைத்து இன்று(08) காலையில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

 

மட்டு தலைமையக பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று காலை 7.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவு ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் முற்றுகையிட்டனர்.

 

இதன்போது கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இருந்து வியாபாரத்துக்காக மட்டக்களப்புக்கு புகையிரதத்தில் இன்று காலையில் ஐஸ் போதைப்பொருளை கடத்திக் கொண்டுவரப்பட்டு வீட்டில் வியாபாரத்துக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்துள்ளர்.

 

29 வயதுடைய குறித்த பெண்ணுக்கு 2 சிறுவர்கள் உள்ளதுடன் கணவனார் வேலை வாய்ப்பைப் பெற்று மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வரும் நிலையில் அண்மைக் காலமாக இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் வியாபாரிகள் யார் யாருடன் தொடர்பு வைத்துள்ளார் இவர் யார் யாருக்கு வியாபாரம் செய்துள்ளார் போன்ற தகவல் பெறுவதற்கு இவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *