சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று(21) வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,155.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 

அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 64.84 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கம் இலங்கை சந்தையிலும் பிரதிபலிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *