லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில், “மாசற்ற உலகம்” எனும் தலைப்பில் சித்திரக் கண்காட்சி இன்று (24) நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், லிந்துலையில் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான உலகை உருவாக்குவதன் அவசியம் மற்றும் மாசுபாட்டின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல்வேறு சித்திரங்களை காட்சிப்படுத்தினர்.
கண்காட்சியை பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், வைத்தியசாலை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு, எதிர்கால தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் பற்றிய பொறுப்புணர்வை வளர்க்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது.

