தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவு

2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

இதன்படி, ஜூன் 29 ஆம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு, ஜூன் 28 ஆம் திகதி இரவு முதல் ஜூன் 30 ஆம் திகதி காலை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *