மனித வியாபாரத் தடுப்புக்கான மாவட்ட செயலணி!

மனித வியாபாரத்திற்கு எதிரான மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கான மாவட்ட செயலணி அமர்வு, உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று (23.09.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வின் வளவாளராக ESCO நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் வே. காண்டீபன் கலந்து கொண்டு செயலணியை வழிநடாத்தினார்.

நேற்றைய அமர்வின்போது, மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து மனித வியாபாரம் தொடர்பான 18 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது பெறப்பட்ட முறைப்பாடுகளில், மனித வியாபாரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள மாதாந்த தடுப்பு செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுவதுடன், புதிய முறைப்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்செயலமர்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் Eastern Self-Reliant Community Awakening Organisation (ESCO) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், Canada Fund for Local Initiatives (CFLI) நிறுவனத்தின் நிதி ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் ESCO நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். ஸ்பிரித்தியோன், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் கே. மேகனகுமார், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. ரமணபிரசாத், மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரி எம்.ஐ.எம். அஸ்கர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ESCO நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நீண்ட காலமாக பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்கில் தகவல் நிலையங்களின் ஊடாக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *