முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பில் காட்டுயானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அப்பகுதி மக்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரது முறைப்பாட்டிற்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேற்று புதன்கிழமை (30) நேரில் சென்று காட்டுயானைகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களைப் பார்வையிட்டார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக ஏற்கனவே கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை  (20) இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பிலக்குடியிருப்பில் மக்கள் காட்டுயானைகளால் பாதிப்புக்குள்ளாகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்தோடு பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு யானைவேலி அமைக்குமாறு குறித்த கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டுமிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *